கணவனைப் பார்க்கச் செல்லும் மனைவியரை உறவுக்கு வற்புறுத்தும் படையினர்! (காணொளி இணைப்பு)

அல்ஜசீரா இலங்கையில் தமிழர்களின் கலை கலாசராம், அவற்றின் இன்றைய சீர்கேடுகள், அவற்றுக்கான காரணங்கள் பற்றிய ஒரு காணொளி ஒன்றை இலங்கையின் விதவைகள் எனும் பெயரில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியிருந்தது.

அதில், கணவன்மார்களை சிறையில் சென்று பார்க்கும் பெண்கள் தொடர்பாக அவர்களில் ஒருவரிடம் கேட்டறிந்தது அல்ஜசீரா. அதில் அப்பெண் தனது கணவனை சிறையில் பார்க்க செல்லும் போது, “உனது கணவருடன் கதைக்க வேண்டுமென்றால் என்னுடன் ஒரு தடவை உறவு கொள்ளவேண்டும்” என இராணுவ அதிகாரிகள் தன்னை கஸ்டப்படுத்தியதாக கிளி நொச்சியில் வாழும் அப்பெண் கூறியுள்ளார்.

இது எனக்கு மட்டுமல்ல எல்லா பெண்களும் எதிர்கொள்கின்ற பிரச்சினைதான். நாம் எமது துணைவர்களைத்தேடி சிறைச்சாலைகளுக்கும், இராணுவ முகாம்களுக்கும் செல்கின்றோம். அங்கு படையினர் தம்முடன் உறவு வைத்துக்கொண்டால் எமது கணவன்மாரை பார்க்க முடியும் என வற்புறுத்துவர் என கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் கட்டுப்பாடான பண்பாடுகள் பற்றி கூறும் அல்ஜசீரா செய்தியாளர் அங்கு நடக்கும் சீர்கேடுகள் தொடர்பாக யாழ் அரச அதிபரை சந்தித்து வினாவுகின்றார்.

அதற்கு யாழ் அரச அதிபர் இமெல்டா, இச் சமூதாயச் சீர்கேடுகளுக்கு படையினர் மட்டும் காரணமல்ல என அவர் கூறிய கருத்தினை அல்ஜசீரா சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு தமிழ் மக்களின் கலாசார சீரழிவுகளுக்கு படையினர் காரணமல்ல என தெரிவித்து படையினரைக் காப்பாற்ற முனைந்ததன் மூலம் யாழ் கட்டளைத் தளபதி மீது தாம் கொண்ட அன்பினை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
Thanks-tamilcnn

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|