வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வீட்டை இலங்கை ராணுவத்தினர் முற்றாக அழித்துள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
பிரபாகரன் வீட்டைப் பார்க்க திரண்டு வரும் சுற்றுலாப் பயணிகளையும் ராணுவத்தினர் தடுத்து அனுப்புகிறார்கள்.
வடமராட்சியில் வல்வெட்டித்துறையில் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு உள்ளது.
இந்தப் பகுதியை ஏராளமான தமிழ் மற்றும் சிங்களர்கள் பார்க்க வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் முதலில் விரும்பிப் பார்க்கும் இடம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த வல்வெட்டித் துறை வீட்டைத்தான்.
இந்த நிலையில், வன்னி உள்ளிட்ட வடக்குப் பகுதியில் புலிகளின் ஆளுகையின்போது எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்கள், மாவீரர் துயிலிடங்களை சிதைத்தும் முற்றாக அழித்தும் வருகிறது இலங்கை ராணுவம்.
இப்போது பிரபாகரனின் வீட்டையும் அழித்துள்ளனர். இந்த வேலையை ராணுவம் சில தினங்களுக்கு முன்பே ரகசியமாய் மேற்கொண்டது. கடந்த சில தினங்களாகவே பிரபாகரன் வீட்டைப் பார்க்க பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இப்போது முற்றாக அந்த வீட்டை அழித்துள்ளது ராணுவம்.இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment