கேணல் கடாபி மரணம்! குதூகலிக்கும் கிளர்ச்சிப் படைகள்!!


லிபிய நாட்டின் தலைவர் கேணல் மொஹம்மர் கடாபி லிபிய கிளர்ச்சிப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடாபியின் பிறந்த இடமான Sirte சேர்டே பகுதியில் வைத்து அவர் பிடிபட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

1969ம் ஆண்டு லிபியாவின் தலைவரான கேணல் கடாபி தொடர்ச்சியாக லிபியாவை ஆட்சி செய்து வந்தார். அண்மையில் கடாபி பதவி விலக வேண்டுமென அந்த நாட்டுக் கிளர்ச்சிக் குழுக்கள் வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் கடாபி அதற்கு மறுப்புத் தெரிவிக்கவே கிளர்ச்சிக் குழுவினருக்கும் கடாபியின் படைகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

கடாபி பதவி விலக வேண்டும் என்ற கிளர்ச்சிக் குழுவின் கோரிக்கைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆதரவு வழங்கி கடாபியின் படைகள் மீது நேட்டோ படைகளை அனுப்பி தாக்குதல்களும் நடத்தின.

பிந்திய தகவல்களின்படி லிபிய நாட்டின் தலைவர் கேணல் மொஹம்மர் கடாபி கிளர்ச்சிப் படையினரால் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

கடாபி பதவி விலக வேண்டும் என்ற கிளர்ச்சிக் குழுவின் கோரிக்கைக்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆதரவு வழங்கிய நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கடாபி பிடிபட்டபோது அவருடைய இரு கால்களிலும் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thanks-TamilCNN

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|