விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் லெப்.கேணல் அப்பையா அவர்கள் 24.12.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அவரது 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தொடக்க கால உறுப்பினரான லெப்.கேணல் அப்பையா அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமறைவு செயற்பாட்டுக் காலத்தில் தேசியத் தலைவர் உட்பட்ட பல முக்கிய உறுப்பினர்களிற்கு பாதுகாப்பான இடங்களை ஏற்படுத்திக் கொடுத்து இலங்கை படைகளிடமிருந்து அவர்களைப் பாதுகாத்திருந்தார்.
அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகளினால் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களின் உருவாகக்கத்தில் இவரின் பங்கே முதன்மையாகவிருந்தது. தொடர்ச்சியாக விடுதலைப் போராட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த லெப்.கேணல் அப்பையா அவர்கள் 24.12.1997 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படைகளின் ஒட்டுப்படை ஒன்றினால் கடத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாயக வித்தாகிப் போன இந்த வீரவேங்கைக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.
நன்றி தமிழ்வின்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment