தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் கொழும்பு பிரிவின் தலைவர் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிரதான சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அப்போது சயனைட் உட்கொண்ட அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை பொலிஸாரின் முன்னாள் கண்காணிப்பாளரும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொலை செய்வதற்கு மூன்று திட்டங்களை கொண்டிருந்ததாகவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பலரையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளின் போது அவர்கள் கூறியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே மற்றும் அமைச்சர் மகிந்த விஜேசேகர ஆகியோர் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு இவர்களே திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இவர்கள் எப்போது கைது செய்யப்பட்டனர் என்ற விபரத்தை கொழும்பு ஆங்கில நாளிதழ் வெளியிடவில்லை.
நன்றி தமிழ்வின்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment