200 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் கனடாவில் விழுந்தது : “நாசா” விஞ்ஞானிகள் தகவல்

விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா “யூ.ஏ.ஆர்.எஸ்.” என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கடந்த 2005-ம் ஆண்டில் முடிவடைந்தது.

இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கைகோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கைகோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் விழும் என “நாசா” விண்வெளி மையம் அறிவித்தது.

நேற்று இரவு 10.30 மணியில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அது பூமியில் மோதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் அது பூமியில் விழவில்லை. இருந்தாலும் அது பூமியை நெருங்கி விட்டது. இன்றுக்குள் பூமியை மோதும் என “நாசா” விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் கனடாவின் ஓகோடோக்ஸ் மாகனத்தில் முற்பகலில் செயற்கைகோள் துண்டுகள் விழுந்துள்ளதாக ட்விட்டரில் “நாசா” விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|