கிராம சட்ட திட்டங்களை மதிக்காத 5 பெண்களை பலாத்காரம் செய்ய உத்தரவிட்ட கொடூரம்!

பாகிஸ்தானில் சிறுவயதினராக இருக்கும்போது கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்ட 5 இளம்பெண்கள் தற்போது திருமண பந்தத்தில் தொடர மறுத்ததால் அவர்களை ஊரைவிட்டு விலக்கிவைத்துள்ளதுடன் அதை மீறி ஊருக்குள் வந்தால் கற்பழிக்கவோ, கொலை செய்யவோபடுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் கிராமப்பகுதிகளில் பொதுவாக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பஞ்சாயத்துமுறையே பின்பற்றப்படுகின்றது. இங்கு கிராமத்து தலைவர் தீர்ப்பு வழங்குவது வழக்கம். அவர்களின் கட்டுபாட்டிற்கு அப்பாற்பட்ட சில வழக்குகளுக்காக மாத்திரமே பொலிஸையும், நீதிமன்றத்தையும் நாடுவர்.

இந்நிலையில் பஞ்சாப்பில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5 இளம்பெண்களுக்கு கடந்த 1996-ம் ஆண்டும் அவர்களுக்கு 6 முதல் 13 வயது இருக்கும் போது முல்லா என்பவரது படிப்பறிவில்லாத மகன்களுக்கு குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்டது.

கிராம நிர்வாகிகளின் முன்னிலையில் துப்பாக்கி முனையில் இந்த திருமணம் நடந்தது.

அப்போது தனது மகளின் திருமணத்திற்கு மறுத்த சிறுமி ஒருவரின் தந்தையொருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் தற்போது அந்த 5 இளம்பெண்களும் தங்களை கட்டாயப்படுத்தி செய்த குழந்தை திருமணத்தை ஏற்க மறுத்துள்ளனர். இது குறித்த புகார் கிராமத்து தலைவர்களிடம் சென்றது. இந்த வழக்கை விசாரித்த கிராமத் தலைவர்கள் கிராமத்தின் சட்டத்தை மதிக்காத அந்த 5 பெண்களையும் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும் அவர்கள் மீறி உள்ளே நுழைந்தால் கற்பழிக்கவோ அல்லது கொலை செய்யவோ வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|