அண்டார்டிக்காவில் பெருகிவரும் இராட்சத நண்டு இனம்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!! (வீடியோ இணைப்பு)

புவி வெப்பமடைதல் தற்போது நாம் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகும்.

நம்மில் பலர் அதன் விளைவுகள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை.

எனினும் இதன் விளைவுகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக அண்டார்டிக்காவின் வெப்பநிலை வெகுவாக அதிகரித்து வருவதனைக் குறிப்பிடலாம்.

இதனால் இப்பகுதியில் உருவாகி வரும் அபாயமொன்று தொடர்பில் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆம், அண்டார்டிகாவின் 'பார்மர் டீப்' எனப்படும் பகுதியில் 'கிங் கிரப்' எனப்படும் இராட்சத நண்டினம் பெருகி வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நண்டினமானது 1 முதல் 3 மீற்றர்கள் வரை வளரக்கூடியன.

இவ்வகை நண்டுகள் வெப்பமான நீர்ப் பகுதிகளிலேயே குறிப்பாக 1.4 பாகை செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலைப் பகுதியிலேயே வாழும் .எனினும் அவை தற்போது அண்டார்டிக் பகுதியில் வாழ்ந்துவருகின்றமையானது அப்பகுதியில் வெப்பநிலை அதிகரித்துவருவதனைக் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவை சுமார் 30 - 40 வரையான ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்துவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடல் வாழ் தாவரங்கள், ஜெலி மற்றும் நட்சத்திர மீன்கள் உட்பட கடல் வளங்களை உண்பதுடன் அவற்றை வேகமாக அழித்துவருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவற்றின் பரம்பல் மேலும் அதிகரிப்பது அப்பகுதியில் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 நன்றி-வீரகேசரி.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|