மனிதனிலிருந்து மின்சாரம்: ஜப்பானின் புதிய முயற்சி (காணொளி இணைப்பு)

உலகம் தற்போது எதிர்நோக்கி வரும் பிரதான சவால்களில் ஒன்று மின் சக்திப் பற்றாக்குறையாகும்.

வளர்ந்து வரும் நாடுகள் முதல் வளர்ச்சியடைந்த நாடுகள் வரை அனைத்தும் இதற்கு முகங்கொடுத்து வருகின்றன.

குறிப்பாக ஜப்பான் தற்போது மிகப் பெரியளவில் மின்சக்தி பற்றாக்குறைக்கு முகங்கொடுத்து வருகின்றது.

அண்மையில் அந்நாட்டைத் தாக்கிய சுனாமியால் அங்கு காணப்பட்ட பல அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டன.

இதனால் ஜப்பான் வரலாறு காணாத மிக மோசமான மின்சாரப் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்துள்ளது.

இதனை ஈடுசெய்யும் முகமாக தற்போது ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் புதுவித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் ஒன்றே மனித அசைவுகள் மற்றும் செயற்பாடுகளிலிருந்து மின்சக்தியைப் பெற்றுக் கொள்ளுதலாகும்.

நமது ஒவ்வொரு அசைவுகளிலும் குறிப்பிட்ட அளவு சக்தி வெளியாகிறது.

இச்சக்தியை சரியான விதத்தில் பயன்படுத்தி மின்சக்தியாக மாற்றுதலே அவர்களின் முயற்சியாக உள்ளது.

பல்வேறு விதங்களில் இவற்றைப் பயன்படுத்த ஆராய்ச்சியளர்கள் முயன்று வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விளக்கத்திற்கு இக்காணொளியை பார்க்கவும் .

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|