அவுஸ்திரேலியாவில் புதிய வகை டால்பின்கள் கண்டுபிடிப்பு

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கடல்வாழ் விஞ்ஞானிகள் கடலில் வாழும் டால்பின்கள் குறித்து பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மெல்போர்ன் மனாஷ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கேத்சார்ல்டன்- ரோப் என்பவர் ஒரு புதிய இன டால்பினை கண்டுபிடித்தார்.
வழக்கமாக தட்டை வடிவிலான மூக்கு பகுதியை கொண்ட டால்பின்கள் தான் அதிகமாக காணப்படும். ஆனால் பாட்டில் வடிவிலான கூர்மையான மூக்கு கொண்ட டால்பின்களை அவர் கண்டறிந்தார்.
இவற்றின் மண்டை ஓடு மற்றும் டி.என்.ஏ மரபணு சோதனை நடத்தப்பட்டது. அப்போதுதான் இது அரிய வகை டால்பின் என தெரிய வந்தது. 1800ம் ஆண்டில் இருந்து இதுவரை 3 வகையான டால்பின் இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த புதிய இன டால்பினும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு துர்சி யோப்ஸ் ஆஸ்டிரெய்ல் என பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாக இவை புரூனான் டால்பின் என அழைக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலிய கடல் பகுதியில் 150 புரூனான் வகை டால்பின்கள் இருப்பதாகவும் கேத்சார்ல் டன்-ரோப் தெரிவித்துள்ளார்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|