300 பேர் உயிரைக் காப்பாற்றிய டிரக் ரைவர்: காணொளி !

போயிங் விமானம் ஒன்று தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதனை அடுத்து அதனைத் தரையிறக்க டிரக் சாரதி உதவியுள்ளமை உலகில் பலரையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. விமானம் விமானநிலையத்தை அடையும்போதுதான் அதன் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வராமல் போனதை விமானி அறிந்துள்ளார். அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் விமானத்தின் முன் சக்கரங்கள் முழுமையாக வெளியே வரவில்லை. இந் நிலையில் விமானத்தை தரையிறக்கினால் அது விபத்துக்கு உள்ளாகி பாதையை விட்டு விலகி வெடிக்கலாம் என்ற நிலை தோன்றியது. அதாவது விமானம் தரையிறங்கும்போது அதன் முன் சக்கரங்கள் தரையில் முட்டாதவண்ணம் அதனை தாங்கிப் பிடிக்க ஒரு டிரக் வண்டியை அவர்கள் பாவிக்க திட்டம் தீட்டினர். ஆனால் அந்த டிரக் வண்டியை ஓட்டுபவர் சற்றும் பிசகாமல் அதனைச் செய்யவேண்டும். சற்று ஆட்டம் கண்டாலும் விமான பாதை மாற வாய்ப்புகள் உண்டு. அத்தோடு விமானம் தரையிறங்கும்போது அது என்ன வேகத்தில் செல்கிறதோ அதே வேகத்தில் அவர் தனது வாகனத்தைச் செலுத்தவேண்டும். நிசான் டிரக் வாகனம் ஒன்றைப் பாவித்தே இவர் இந்த விமானத்தை பேராபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார். காணொளியைப் பார்த்தீர்களா ? வியப்பில் ஆழ்ந்தீர்களா ? இது ஒரு கமேர்ஷல் (விளம்பரம்) அதாவது நிசான் புரென்டேரா டிரக் வண்டிக்காக நிசான் நிறுவனம் தயாரித்த ஒரு விளம்பரம் ஆகும். இது நடந்தது உண்மையல்ல ! அதாவது நிசான் நிறுவனம் இந்தக் காணொளியை எடுத்துவிட்டு முதலில் அதனைப் போடும்போது உலகில் உள்ள பல மில்லியன் மக்கள் இதனை உண்மை என்று நம்பினார்கள். பின்னர் தான் இது ஒரு விளம்பரம் என்ற செய்தி பரவியது. இது ஏற்கனவே டிஸ்கவரி சேனலில் முன்னர் ஒளிபரப்பாகியிருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பால் நிசான் புரென்ரேரா டிரக் வாகனம் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது என நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி-அதிர்வு. 

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|