விளையாட்டு நட்சத்திரங்களுக்கு ஊக்கமளிக்க காத்திருக்கும் தீபிகா படுகோன்!

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு நட்சத்திரங்களுக்கு ஊக்கம் அளிக்க காத்திருக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். முன்னாள் இந்திய பாட்மின்டன் வீரர் பிரகாஷ் படுகோனின் மகள் தான் தீபிகா. தந்தையை போல பள்ளி பருவத்திலேயே பாட்மின்டனில் கைதேர்ந்து விளங்கினார். கர்நாடக மாநில அணிக்காக பங்கேற்றுள்ளார். பின் மாடலிங் துறைக்கு தாவிய இவர், பாட்மின்டனிற்கு குட்பை சொல்லி விட்டு பாலிவுட் நடிகையாக அவதாரம் எடுத்தார். 



இவரை ஒலிம்பிக் நிர்வாகிகள் சமீபத்தில் அணுகியுள்ளனர். வரும் 2012ல் லண்டனில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் போது இந்திய வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில்,ஒலிம்பிக்கை பிரபலப்படுத்தும் பணிக்கு இளம் வயதில் சாதித்த ஒருவரை தேடினோம். இதற்கான தூதராக தீபிகாவை தேர்வு செய்தோம். நமது நட்சத்திரங்கள் ஒலிம்பிக்கில் சாதிக்க, தேவையான ஊக்கம் அளிக்க ஒத்துக் கொண்டார்,என்றார். இது குறித்து தீபிகா கூறுகையில்,எனது முதல் காதல், விளையாட்டு மீது தான். எனவே, இந்தியர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்தும் முயற்சியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்,என்றார். 

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|