நெல்லியின் மருத்துவத்தன்மை அறிந்ததுண்டா?


* நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

நெல்லிக்காய்நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.

நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.

*நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால்பெருவயிறுஇரத்தசோகைமூலம்பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.

நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.

நெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்துபாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி,அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடுவாந்தி ஆகியவை நீங்கும்.

நெல்லிவற்றலுடன் வில்வஇலைசீரகம்சுக்குபொரி ஆகியவற்றை ஒன்றாகஇடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்திநிற்கும்.

நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி,சுவை உண்டாகச் செய்யும்.

நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம்பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக்கொண்டு பொடியாக்கிதேன் கலந்து.... சுண்டைக்காய் அளவு உருட்டி காலை,மாலை தண்ணீ­ரில் உட்கொள்ளபெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும் நீங்கும்.

நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும்குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

1 comments:

MANO நாஞ்சில் மனோ said...

மிக்க நன்றி...

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|