​பொது வைபவங்களுக்கு தடை விதிப்பு! மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறலாம் என்ற அச்சம்?


இன்றைய தினம் உலகத்தமிழர்களால் நினைவுகூறப்படவுள்ள தமிழீழ தேசிய எழுச்சிநாளாகிய மாவீரர்நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் நடைபெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக மட்டக்களப்பில் நடைபெறவுள்ள பொது வைபவங்களுக்கு பாதுகாப்புப் படையினர் தடைவிதித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்றைய தினம் உலகத்தமிழர்களால் நினைவுகூறப்படவுள்ள தமிழீழ தேசிய எழுச்சிநாளாகிய மாவீரர்நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளதாக இணையத்தளங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து மட்டக்களப்பில் நாளை நடைபெறவிருந்த பொது வைபவங்கள் அனைத்தையும் நிறுத்துமாறும் இன்றைய நிகழ்வுகளை வேறோறு தினத்திற்கு மாற்றுமாறும் படைத்தரப்பும்,பொலிசாரும் உத்தரவிட்டுள்ளதாக நிகழ்வுகளை ஒழுங்குசெய்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நாளைய தினம் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைப்பண்பாட்டுக் பேரவை நடாத்தும் 9வது கதிரவன் சஞ்சிகை வெளியிட்டு நிகழ்வை நிறுத்துமாறு பொலிசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் நாளைய தினம் நடைபெறவிருந்த கதிரவன் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  இதேவேளை நாளைய தினம் தமிழர்களுக்கான திருமண முகூர்த்த நாள் என்பதால் மட்டக்களப்பின் சகல பொது மண்டபங்களிலும்,ஆலயங்களிலும் பல திருமணங்கள் நடைபெறவுள்ள நிலையில் படையினரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை பீதியையும் ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் பெற்றோர்கள்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|