நூறு வயதை கடந்த ஆயிரங்கள்!

சீனாவில் நூறு வயது கடந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரம் என சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சீனாவில் ஒரு குழந்தை திட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதனால் பிறப்பு எண்ணி்க்கை குறைந்து காணப்பட்டது. இருப்பினும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் அவ்வப்போது தெரிவித்து வந்தது. 

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஒன்றாம் தேதி நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி நூறு வயது கடந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 921 என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இதன் எண்ணிக்‌கை 5 ஆயிரத்து 228 பேர் அதிகமாகும். குவாங்சிஜுவாங் மாகாணத்தில் வசித்து வரும் 126 வயதுடைய பெண்மணிதான் மிக வயதானவராக கண்டறியப்பட்டுள்ளார். இதே மாகாணத்தை சேர்ந்த 213 தம்பதிகள் நூறு வயதை கடந்தவர்களாக உள்ளனர். சீனர்களின் சராசரி ஆயுள்காலம் 73.5 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|