இணைய ஊடகங்களை நல்வழிப்படுத்தும் இமெல்டா சுகுமார்.


இணைய ஊடகங்களும் பொலிஸ் உத்தி யோகத்தர்களும் முதலில் தங்களைத் திருத் திக் கொள்ளட்டும். அதன்பின் சமுதாயத்தை திருத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித் தார் யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார். விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் பால்நிலை கற்கைநெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்குச் சான்றிதழ் வழங் கும் வைபவம் கடந்த 5 திகதி யாழ்.பல்கலைக் கழகம் கைலாசபதி அரங்கில் இடம் பெற்றது.இந்தநிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது:
ஊடகங்கள் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறித் தீர்வு கண்டு கொடுப்பவை. அதனால் சொல்வதைக் கவனமாகச் செவி மடுத்து ஊடகங்கள் எழுதவேண்டும். சொல் லாத விடயங்களைத் திரிபுபடுத்துவதும் எழு துவதும் ஊடகங்களுக்கு அழகல்ல. ஊட கங்கள் அவமானப்படக் கூடாது என்பதற் காகவே நான் இதனைக் கூறுகிறேன். அபிவிருத்தி என்பது சேவை செய்வதற் காகவே. சேவை செய்வதற்குரிய கருவி களை வைத்துக் கொண்டு பிரச்சினைகளை களைய வேண்டுமே தவிர பிரச்சினைகளை தூண்டி விடக் கூடாது.தற்போது யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறை தொடர்பான முறையீட்டுப் பகுதியில் சுதந்திரமாகப் பெண்கள் முறையிட்டு வருகின்றனர்.

யாழ்.மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களும், பெண்களுக் கெதிரான வன்முறைச் சம்பவங்களும் புரியாத புதிராகவே உள்ளன. நான் வன்னியில் 8 வருடங்களாகக் கடமையாற்றும்போது இவ்வாறான சம்பவங்களை அறிந்ததில்லை.பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான சுதந்திரத்திற்கு நான் குரல்கொடுப்பேன். அதைத் தட்டிக் கேட்பதற்கு எந்த அரச அதிகாரிகளுக்கோ, ஊடகங்களுக்கோ உரிமை இல்லை என்றார். இந்நிகழ்வில் விழுது ஆற்றல் மேம் பாட்டு மையத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் திருமதி சாந்தி சச்சிதானந்தம், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஆய்வு உத்தியோகத்தர் எஸ்.ஹரிகரதா மோதரன், ஆறுதல் நிறுனப் பணிப்பாளர் டிவகலாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|