உலகிலேயே முதல் முதல் நடந்த நூதனமான கிரெடிட் காட் கொள்ளை !


ஒரு மில்லியன் டாலர்கள் கொள்ளையடித்து அதில் ஏழைகளுக்கு கிரிஸ்மஸ்து பரிசுகள் வாங்கிகொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நூற்றுக்கணக்கான வங்கி அட்டைகள் ஹேக்கிங் செய்யப்பட்டு நேரடியாக சமூக தொண்டு நிறுவனங்களின் அக்கவுண்டுகளுக்கு பணம் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது. இணைய நெட்வேர்க்கிங்கில் தேர்ச்சி பெற்ற குறித்த அனானி ஹேக்கர்ஸ் குழுவினர், சுமார் 90,0000 ற்கு மேற்பட்ட தனிப்பட்ட நபர்களின் கிரெடிட் கார்ட் தகவல்கள், அவர்களது வீட்டு முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள் என்பவற்றை திருடி பிரிதொரு தளத்தில் பிரசுரித்துள்ளார்கள்.

ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற அமெரிக்க இணைய நிறுவனங்களின் பிரத்தியேக தகவல்களும், இவற்றில் அடங்கும். இந்த தகவல்களை கொண்டு குறித்த நபர்களின் கிரெடிட் கார்டுகளிலிருந்து பணத்தை எடுத்து ஏழை மக்களுக்கு உதவும் சமூக தொண்டு நிறுவனங்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் என்பவற்றிற்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். அந்த டிரான்ஸ்பருக்கான ரசீதுகளையும் திருப்பி அனுப்பியுள்ளார்கள். இத்தனைக்கும் தனது கிரெடிட் கார்டில் மீதம் எவ்வளவு இருகிறது என பரிசீலிக்கும் வரை, கிரெடிட் கார்டு உரிமையாளர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்விவகாரத்தால் பெரும் பணக்கார புள்ளிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கோபத்துக்கும் உள்ளாகியிருக்கின்ற நிலையில், டெக்ஸாஸ் மாநில நடுத்தர, ஏழை மக்கள் இந்த அனோனிமஸின் துணிகரமான கருணை செயலுக்கு தமது வரவேற்பையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். 

பணத்தாலும், செல்வாக்காலும் ஒட்டுமொத்த நாட்டையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் பணக்கார பெரும்புள்ளிகளை முகத்தில் அறைய இது ஒன்றே வழி என இச்செய்திக்கு அனல் பறக்கும் காமெண்டுகள் குவிகிறது.

நன்றி அதிர்வு.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|