இறுதியாக மெளனம் கலைத்தார் அடாம் ரிட்டி: இலங்கையில் என்ன நடந்தது ?


பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொஃக்ஸ் சர்ச்சையில் மாட்டி பின்னர் பதவியை ராஜினாமாச் செய்தார் என்பது யாவரும் அறிந்ததே. இவர் இலங்கை அரசின் உற்ற நண்பர் ஆவார். இவரின் இணைபிரியா நண்பரான அடாம் ரிட்டியை தன்னுடன் பல தடவைகள் அழைத்துச் சென்றது. தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவரை சில காரியங்களைச் செய்ய அனுமதித்தது மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் தனிப்பட்ட நட்ப்பு ரீதியில் அவரை வைத்திருந்தது என பல குற்றச்சாட்டுகள் லியாம் பொஃக்ஸ் மீது எழுந்தது. குறிப்பாக இலங்கை அரசுக்கு இவர் பல உதவிகளைப் புரிந்தார் என்பதும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

லியாம் பொஃக்ஸ் பதவி விலக் காரணமான அவரது நண்பர் அடாம் ரிட்டி அவர்கள் இறுதியாக மெளனம் கலைந்துள்ளார். தனது உள்ளக் குமுறல்களை ஊடகத்துக்கு அவர் வெளியிட்டுள்ளார். தன்னைத் தேனே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என அவர் அழைத்ததாகவும் அப்பதவி தனக்கு உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அப் பதவிக்கு ஏன் நீங்கள் விண்ணப்பிக்கக்கூடாது எனப் பலர் கேட்டபோதும் தனக்கு பாதுகாப்பு குறித்து எதுவுமே தெரியாது எனத் தான் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். லியாம் பொஃக்ஸ்சுடன் இணைந்து பல தடவை தாம் இலங்கை சென்றுவந்ததாகக் குறிப்பிடும் அடாம் ரிட்டி இலங்கை ஏற்படுத்திய சில இடைக்காலத் தீர்வை தாம் ஆதரித்ததாகவும் கூறியுள்ளார். அதற்காக தாம் லியாம் பொஃக்ஸ்சிடம் பரிந்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

முந் நாள் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொஃக்ஸ்சும் அவர் நண்பர் அடாம் ரிட்டியும் பல தடவை இலங்கைக்குச் சென்று பல ஒப்பந்தங்களைப் போட்டும் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு நற்பெயரை ஏற்படுத்தவும் இலங்கை சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக்கவும் லியாம் பொஃக்ஸ் உதவியுள்ளார் என்ற பாரிய குற்றச்சாட்டுகள் இருந்தாலும் இதுவரை அவை நிரூபிக்கப்படவில்லை. இவை மிக இரகசியமாகவே நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி அதிர்வு.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|