பாலைவனத்தில் வாழும் ராட்சத பல்லி வகைகள் பாதாளத்தில் வீடு கட்டி வாழ்வது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
பாலைவனங்களில் வசிக்கும் ராட்சத பல்லிகள் குறித்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மெக்வாரி பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஸ்டீவ் மெக்ஆல்பின் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் மத்திய பகுதியில் உள்ள உலுரு மலை மற்றும் இதை ஒட்டியுள்ள பாலைவன பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு வசிக்கும் ராட்சத பல்லிகள் அவற்றின் உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் குறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்தனர்.
இதில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள்: அவுஸ்திரேலிய பாலைவனத்தில் வசிக்கும் பெரிய சைஸ் பல்லிகள்(லிசார்ட்) குடும்பம் குடும்பமாக வாழ்க்கை நடத்துகின்றன. இவை பாதுகாப்பாக வாழ்வதற்காக பக்காவாக திட்டமிட்டு தரைக்கு அடியில் வாழ்விடங்களை அமைக்கின்றன.
நிறைய வாசல்கள் வைத்து பதுங்கியிருப்பதற்காக தாராளமாக இடங்கள் அமைத்து ஏறக்குறைய வீடுகள் போலவே குடியிருப்புகளை அமைக்கின்றன. ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு போவதற்கான வழியையும் அமைக்கின்றன.
இந்த வீடு சுமார் 40 அடி நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. ஒரு வீட்டில் சராசரியாக 20 வாசல்கள் வரை இருக்கின்றன. வீடு கட்டும் வேலையில் ஒட்டுமொத்த குடும்பமும் ஈடுபடுகின்றன. வாரிசுகளுக்காக தனி பகுதியை உருவாக்கி தருகின்றன. தங்களுக்கு பிறகு அந்த வீட்டை தங்களது வாரிசுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றன.
இவ்வாறு கட்டப்படும் பாதாள வீடுகளில் அதிகபட்சம் ஒரு பல்லிக் குடும்பம் 7 ஆண்டு வரை வாழ்கிறது. அதுவரை அந்த வீடு சேதமடையாதவாறு அந்த குடும்பமே பாதுகாக்கிறது.
குடும்பத்தில் சில சோம்பேறி உறுப்பினர்கள் இருந்தால் அவர்களது வேலையையும் மற்றவர்கள் பகிர்ந்து செய்கின்றனர். உலகம் முழுவதும் பல்லியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வகைகள் இருக்கின்றன. ஆனால் அவுஸ்திரேலிய பாலைவனத்தில் வாழும் ராட்சத பல்லிகள் மட்டுமே வீடு கட்டுகின்றன.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment