அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் உலகில் அதிக நீளமான கைவிரல் நகங்களைக்கொண்ட பெண்ணென கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த கிறிஸ்டைன் வோல்டன் என்ற 45 வயதான இப்பெண்ணின் கைவிரல் நகங்களின் மொத்த நீளம் 19அடி 9 அங்குலம்.
இவரது வலது கை நகங்களின் நீளம்� 9 அடி 7 அங்குலமும், இடது புறத்திலுள்ள நகங்களின் நீளம் 10அடி 2அங்குல நீளமாகவும் காணப்படுகின்றது. தொழிற்சார் பாடகரான கிறிஸ்டைன் தனது 18 ஆவது வயதில் நகங்களை வளர்ப்பதற்கு ஆரம்பித்துள்ளார்.
இவர் தனது நீண்ட நகங்களை வைத்துக்கொண்டே தன்னை அழகுப்படுத்திக்கொள்ளுதல், வீட்டு வேலைகள் என்பவற்றையும் செய்துக்கொள்கின்றார். எனக்கு வீட்டை சுத்தம் செய்வது பிடிப்பதில்லை. ஆனாலும் அதை நான் செய்கிறேன். மற்றும் எனது மேக்கப்பை சிறப்பாக செய்துகொள்வேன் என கிறிஸ்டைன் தெரிவித்துள்ளார்.
இவருக்கு முன் உலகிலே அதிக நீளமான கைவிரல் நகங்களைக் கொண்ட பெண்ணாக அமெரிக்காவின் சோல்ட் லேக் சிட்டியை சேர்ந்த லீ ரேமன்ட் என்பவர் இடம்பெற்றிருந்தார். அவரின் நகங்களின் நீளம் 28அடியாகும். ஆனால் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற கார் விபத்தில் அவரின் நகங்கள் முறிந்தன.

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment