சீனா பாகிஸ்தான் இடையேயான ராணுவ கூட்டுபயிற்சிவழக்கமான ஒன்று தான். இதற்காக இந்தியா பயப்பட தேவையில்லை என சீன ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளதாக சீனா டெய்லி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவும் பாகிஸ்தானும் தற்போது அனைத்து துறைகளிலும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்த கட்டமாக முதன் முறையாக இருநாட்டு ராணுவமும் இணைந்து போர்பயிற்சியில் ஈடுபட உள்ளது. அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்பட வில்லை.
இருநாட்டு ராணுவத்தினர் ஆயுத பயிற்சி மேற்கொள்வது தீவிரவாத நடவடிக்கைகளை தடுப்பதறகாக மட்டுமே தவிர இந்திய ஊடகங்கள் நினைப்பது போல் இந்தியாவை அச்சுறுத்துவதற்காக மட்டுமே இந்த பயிற்சியை நடத்த வில்லை என ராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அதிகளவு ராணுவத்தை குவித்து ஒரு வித பதற்றத்தை உண்டு பண்ணியது சீனா. இதை மறுத்த ராணுவ அமைச்சர் இந்திய பத்திரிகைகளின் கூற்று ஆதாரமற்றவை என்று அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment