தமிழீழ விடுதலையின் தேவையை உணர்த்தும் விதமாகவும் தமிழிழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணிகள் தொடர்பாகவும் மிக அழுத்தம் திருத்தமாக எடுத்து திரையிடப்பட்டுள்ள உச்சிதனை முகர்ந்தல் திரைப்படம் தொடர்பான செய்தி சன் டிவியில் இன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.
உச்சிதனை முகர்ந்தல் திரைப்படத்தில் ஈழத்தில் சிங்கள வெறியர்கள் நடத்திய கோடூர கொலைகள்,பாடசாலைகள் மீதான விமானத்தாக்குதல்கள்,தமிழ் இளைஞர்களின் கண்களை கட்டி பிரடியில் சுடுவது போன்ற காட்ச்சிகளும் உச்சிதனை முகர்ந்தல் திரைப்படத்தில் ஈழத்து கவிஞர் காசியானந்தன் அவர்களால் எழுதப்பட்ட இருப்பாய் தமிழா நேருப்பாய் நீ இழிவாய் கிடக்க செருப்பா நீ?என்ற பாடலும் ஒளிபரப்பப்பட்டதோடு உச்சிதனை முகர்ந்தல் திரைப்படத்தின் இயக்குணர்,நடிகர்கள்,ஒளிப்பதிவாளர் என்று அந்த படத்தில் பணியாற்றியவர்களின் பேட்டிகளும் ஒளிபரப்பப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போதும் செஞ்சோலை வலாகத்தின் மீது சிங்கள கழுகுகள் குண்டு வீசி அப்பாவி மாணவிகள் படுகொலை செய்யப்பட்ட போதும் அது தொடர்பான செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து வந்திருந்த சன் டிவி தற்போது ஈழத்தின் முழு வேதனையையும் தமிழீழ தனி நாடு கேட்பதற்கான தேவையையும் உணர்த்தும் விதமாக எடுக்கப்பட்ட உச்சிதனை முகர்ந்தல் திரைப்படம் தொடர்பாக நல்லவிதமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சன் டிவிக்கு உயர்வு ஈழத்து மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
"இருப்பாய் தமிழா நேருப்பாய் நீ இழிவாய் கிடக்க செருப்பா நீ"
நன்றி அதிர்வு.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment