அரசின் மாவீரர் தினப்பரிசாக அனுராதபுரம் சிறையினில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலை காவலர்களே இத்தாக்குதலை நடத்தியதாக நாம் இலங்கையர் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இன்று மதியம் கைதிகள் கூட்டினுள் வந்த சிறைச்சாலை காவலர்களே கைதிகளை மாவீரர் தினப்பரிசுகள் தரவேண்டும் வெளியே வாருங்கள் என அழைத்துள்ளனர். எனினும் நோக்கத்தை புரிந்து கொண்ட கைதிகள் வெளியே வர மறுத்துவிட்டனர். அதையடுத்து அவர்களை பலாத்காரமாக வெளியே இழுத்துச் சென்ற சிறைச்சாலை காவலர்கள் நிர்வாணமாக்கி பொது மைதானத்தினில் வைத்த கண்டபடி தாக்கியுள்ளனர்.
குற்றசசாட்டுக்கள ஏதுவும் அற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 65 அரசியல் கைதிகளே இவ்வாறு மோசமாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஜவர் படுகாயமடைந்து வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்;டுள்ளனர்.மேலும் பலர் காயமடைந்திருக்கலாமென கூறப்படுகின்றது. எனினும் கைதிகளை பார்வையிட எவரும் அனுமதிக்கப்படாத நிலையில் உண்மைவிபரங்கள் முழுமையாக வெளிவந்திருக்கவில்லை.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment