கிளிநொச்சி, இரணைமடுவில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதையை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டது. கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் இருந்து சுமார் ஏழு கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பால் பழைய கண்டி வீதியின் இரணைமடுப் பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்த விமான ஓடுபாதை அமைந்துள்ளது. இதனைப் பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடும் நிகழ்வும் அதனையொட்டிய கலை நிகழ்வும் நேற்றுமுன்தினம் மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றன.
விமான ஓடுபாதையின் அருகில் அமைந்துள்ள மைதானத்தில் இரவு கலை நிகழ்வுகளும், இன்னிசை நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு கிலோ மீற்றர் நீளமான இந்த விமான ஓடுபாதையை இலங்கை விமானப் படையினர் தற்போது புனரமைத்து வருவதுடன் பல்வேறு கட்டுமானப்பணிகளையும் மேற்கொண்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment