உலகம் சுற்றும் சூரிய கலக்கப்பல் இன்று இலங்கை கடற்பரப்பில்.


உலகத்தைச் சுற்றிப் பயணம் மேற்கொண்டு வரும் உலகின் முதலாவதும், மிகப்பெரியது மான சூரியக் கலக்கப்பல் இன்று வந்தடையவுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘டியூரானோ சோலார் கப்பல்’ எனும் பெயர்கொண்ட இந்தக் கப்பல் முதற்கட்டமாக இன்றையதினம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

நிலையான சக்திப் பயன்பாட்டை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் உலகம் முழுவதற்கும் பயணம் மேற்கொண்டிருக்கும் இக்கப்பல் முதற்தடவையாக இலங்கை வந்தடையவுள்ளது. இது முதலில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அதன் பின்னர் காலி மற்றும் கொழும்புத் துறைமுகங்கும் செல்லுமென்றும் துறைமுக அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். 60 தொன் எடைகொண்ட இந்தக் கப்பல் பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த இக்கப்பல் அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்று பின்னர் அங்கிருந்து இலங்கை வரவுள்ளது. இக்கப்பல் இந்துசமுத்திரத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு சுவெஸ் கால்வாய் ஊடாக ஏனைய ஊடக நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி உருவாக்கப்பட்ட இக்கப்பல் 2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி உலகத்தைச் சுற்றும் பயணத்தை ஆரம்பித்தது. இக்கப்பல் 2012 ஆம் ஆண்டு ஆரம்பித்த இடத்தை மீண்டும் சென்றடைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|