பூஸா தடுப்பு முகாமிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கடத்தப்பட்டார்!


யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவனான வேதாரணியம் லத்தீஸ் (27 வயது) கடத்தப்பட்ட சம்பவம் மாணவ சூழலிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு யாழ்.திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நணபர்ளை சந்தித்து விட்டு கைதடியிலுள்ள தனது விடுதிக்கு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இவர் கடத்தப்பட்டிருக்கலாமென குடும்பத்தவர்கள் சந்தேகிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சொந்த இடமாக கொண்ட இவர் வன்னியில் படையினரால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையிலேயே பூஸா தடுப்பு முகாமிலிருந்து இழுபறிகளின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகையால் வழமை போல திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நண்பர்ளை சந்திக்க வந்து திரும்புவது இயல்பானதென நண்பர்கள் கூறுகின்றனர். நேற்று இரவு வரை இவர் தைடியிலுள்ள பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விடுதிக்கு திரும்பாததையடுத்து சக மாணவர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். அவ்வேளையினில் பலர் உரையாடும் சத்தங்கேட்டதாகவும் சிலர் சிங்கள மொழியிலும் கதைப்பதை கேட்டதாகவும் மாணவர்கள் தரப்பினில் கூறப்படுகின்றது. இவரை படையினரே கடத்தியுள்ளதாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உறுதியாக கூறுகின்றனர்.
 
நேற்று மாவீரர் தினங்கொண்டாட்டங்களில் மாணவர்கள் பாலசிங்கம் விடுதியில் ஈடுபட்டிருந்ததையடுத்து விடுதி சூழலில் படையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்;. மாணவர்கள் அச்சம் காரணமாக அனைவரும் ஒன்று கூடி விடுதிகளுள் முடங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|