குவைத்தில் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்! படங்கள் இணைப்பு.


குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள், 25.11.2011 அன்று தோழர்.செங்கொடி நினைவரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வரவேற்புரை நல்கி கவிஞர். விருதைபாரி அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிவைத்திட தோழர்.தமிழ்நாடனை அழைத்தார். 

தோழர். தமிழ்நாடன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி தொடக்கவுரை நிகழ்த்தினார். தொடர்ந்து முனு.சிவசங்கரன் அவர்கள் மாவீரர்நாள் உறுதிமொழி செய்துவைத்தார்கள். தொடர்ந்து, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர். தியாகு அவர்களின் மாவீரர்நாள் அறிக்கையினை தொழிலதிபர் சாமி வெளியிட பொறியாளர் இராமன் அவர்கள் பெற்றுக்கொண்டர்கள். தோழர். சிவமணி, தோழர்.பகலவன் ஆகியோரின் எழுச்சிமிகு மாவீரர்நாள் கவிதையினைத் தொடந்து, தோழர்.முனு.சிவசங்கரன் அவர்களும் தோழர்.பின்னலூர் மணிகண்டன் அவர்களும் உரையாற்றினார்கள்.

தொடர்ந்து உரையாற்றிய பொறியாளர் முத்து அவர்கள், இலங்கை விமானத்தில் பயணிப்பதை புறக்கணிக்கவும், எதிரிகளின் பொருட்கள் தயாரிப்புக்களை புறக்கணிக்கவும் கோரிக்கையினை முன்வைத்து எழுச்சியான உரைநிகழ்த்தினார்கள். இதைத்தொடர்ந்து, தமிழகத்திலிருந்து இணையம் வழி தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.தியாகு அவர்கள் மாவீரர்நாள் உரை நிகழ்த்தினார்கள். அடுத்து பொறியாளர் இராமன் அவர்கள் தமிழர்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து உரையாற்றினார்கள். தொடர்ந்து, நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப்பிரதமர் திரு. உருத்திராபதி சேகர் அவர்கள் இணையம் வழி மாவீரர்நாள் உரையாற்றினார்கள்.






Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|