இராணுவத்தின் தொடர் போர்குற்றங்கள்: புலிகளின் பொலிஸ் பிரிவு நபரும் கொலையா ?

வன்னியில் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில் அவர்கள் தமக்கென பல பிரிவுகளை விஸ்தரித்திருந்தனர். இப்பெரு நிலப்பரப்பில் அவர்கள் அறிவிக்கப்படாத அரசாங்கம் ஒன்றை நடத்திவந்தனர். அதில் ஒரு பிரிவாக தமிழீழ பொலிஸ் பிரிவும் இயங்கிவந்தது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் குற்றச்செயல்களைத் தடுக்கவும் அது திறம்பட இயங்கிவந்தது. அவ்வாறு புலிகளின் பொலிஸ் பிரிவில் வேலையாற்றிய நிருமனலன் என்னும் இளைஞரை இலங்கை இராணுவத்தினர் பிடித்து அவரை விசாரிக்கும் புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. கணுக்காலில் சூடு பட்ட நிலையில் இருக்கும் இவரின் ஆடைகளைக் களற்றி அவரைச் கடுமையாக விசாரிக்கும் இராணுவத்தினர் பின்னர் அவரை என்ன செய்தனர் என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

23 வயதுடைய நிருமலனை இலங்கை இராணுவத்தினர் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தி பின்னர் கொலைசெய்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. துன்னாலை நெல்லியடியைச் சேர்ந்த இவரை இராணுவம் விடுவித்ததற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். யுத்தம் உக்கிரமாக நடந்த காலகட்டத்தில் ஆழ ஊடுருவும் படையணி ஒன்றினால் இவர் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுக்கின்றது. காரணம் புகைப்படத்தில் உள்ள இராணுவத்தில் சிலர் புலிகளின் வரிப்புலி சீருடைகளை அணிந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.



எது எவ்வாறு இருப்பினும் நிருமலனை இலங்கை இராணுவத்தினர் காயமடைந்த நிலையிலேயே பிடித்துச் சென்றனர் என இவருடன் சேர்ந்து கைதாகிய மற்றுமொரு தமிழீழ பொலிஸ் படையின் உறுப்பினர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார். தாம் எல்லைக் காவலில் நின்றிருந்தவேளை தம்மை இலங்கைப் படைகள் சுற்றிவளைத்து தாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி-அதிர்வு.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|