ஜெர்மனியில் நடைபெற்ற கேணல் கிட்டு உள்ளிட்ட 10 வேங்கைகளின் 19ஆம் ஆண்டு நினைவுநாள்

வங்கக்கடலில் இந்தியா - சிறிலங்கா கடற்படையினரின் கூட்டு சதியினால் 16.01.1993 அன்று வீர வரலாறான கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 19ஆம் ஆண்டு நினைவுநாள் நேற்று ஜெர்மனி பெர்லினில் இடம்பெற்றது.வீரகாவியமான மாவீரர்களான லெப்ரினன் கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன் அல்லது மலரவன்,கடற்புலி கப்டன் ஜீவா,கடற்புலி கப்டன் குணசீலன் அல்லது குணராஜ், கடற்புலி கப்டன் நாயகன்,கடற்புலி கப்டன் றொசான், கடற்புலி லெப்ரினன் அமுதன், கடற்புலி லெப்ரினன் நல்லவன்,கடற்புலி லெப்ரினன் தூயவன் ஆகிய மாவீரர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு நாளில் பொதுச்சுடர் நிகழ்வை தொடர்ந்து சுடர்வணக்கம், அகவணக்கம் மக்களால் செலுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து உணர்வு பூர்வமாக எழுட்சிப் பாடல்கள் பாடப்பட்டது. இந்நிகழ்வில் தாயக மக்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் சில உதவித்திட்டங்கள் அத்தோடு அரசியல் வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனோடு, முத்துக்குமார் தொடக்கம் முருகதாஸ் வரை தம்மை தாமே தீயினில் ஆகுதியாக்கிய தியாகச் சுடர்கள் நினைவாகவும் வணக்க நிகழ்வு உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






நன்றி தமிழ்வின்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|