உள்நாட்டு யுத்தத்தால் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வெளிநாட்டிற்கு சென்ற ஒரு இளைஞனின் காதலையும் மண்ணின் பெருமையையும் வெளிக்கொணரும் ஒரு புதிய மண்வாசம் மிக்க பாடலாக, ஈழத்து இசை அமைப்பாளர் வவுனியா கந்தப்பு ஜெயந்தனின் இசையில் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவருகின்றது. இப்பாடல் இவர்களின் இசையில் வெளிவர இருக்கும் யாழ்தேவி எனும் இசை தொகுப்பிற்காக உருவாக்க பட்ட ஒரு பாடலாகும்.
ஏற்கனவே இவர்கள் வெளியிட்ட காந்தள் பூக்கும் தீவிலே மற்றும் எங்கோ பிறந்தவளே ,கண்ணீரில் வாழும் ,கனவுகளே கனவுகளே போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே பிரபல்யம் பெற்ற பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கலைஞர்கள், இந்த பாடல் அடங்கிய “யாழ்தேவி” என்ற இசை தொகுப்பையும் வவுனியா மண்ணில் மிக விரைவில் வெளியிட உள்ளனர்.
பாடல் இசை- K.ஜெயந்தன், பாடல் வரிகள்- T.சதீஸ்காந்த், பாடலை பாடியோர்- K. ஜெயந்தன், பிரதா, K. ஜெயரூபன், ஒளிபதிவு எடிட்டிங்- T.பிரியந்தன் ஆகியோரின் முயற்சியில் வெளிவர உள்ளது.
நன்றி தமிழ்வின்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment