முள்ளியவளையில் மாவீரர்களின் எலும்புகூடுகளை தோண்டி எடுக்கும் படையினர்! மக்கள் அதிர்ச்சியில்


முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லப் பகுதி படைத்தரப்பினால், நேற்று உழுது நாசமாக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மாவீரர்களது கல்லறைகள் கிளறப்பட்டு எலும்புக்கூடுகள் கூட வெளியே எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முள்ளியவளை மாவீரர் துயிலுமில்ல பகுதியில் படைத்தளமொன்றினை அமைக்கும் வகையில், தற்போது எஞ்சிய மாவீரர்களின் கல்லறைகளது எலும்புக் கூட்டுத் தொகுதிகளை அகற்றும் நடவடிக்கையில் படைத்தரப்பு ஈடுபட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த உடன் வன்னியில் இராணுவத்தினர் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லப் பகுதியை இடித்து கல்லறைகள் உள்ளிட்ட அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது மாவீரர்களின் வன்கூடுகளை அகற்றும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய நடவடிக்கைகள் மனித குலத்தின் மாண்பை காலில் போட்டு மிதிக்கும் ஓர் நடவடிக்கையென கே.சிவாஜிலிங்கம் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

வன்னியில் படைத்தரப்பினால் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் பலவும் தற்போது படைதரப்பின் இராணுவ தளங்கள் ஆக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி தமிழ்வின்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|