விடுதலைப்புலிகளால் பதிவு செய்யப்பட்ட கட்சியை நீக்க நடவடிக்கை!

விடுதலைப் புலிகளால் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் பதிவை நீக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால், சுமார் 30 அரசியல் கட்சிகளின் பதிவுகள் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள், கணக்கு அறிக்கைகள் மற்றும் கொள்கை அறிக்கைகளை பல ஆண்டுகளாகச் சமர்ப்பிக்கத் தவறிய 30 அரசியல் கட்சிகளின் பதிவுகளை இரத்துச் செய்ய இலங்கைத் தேர்தல் திணைக்களம் முடிவு செய்துள்ளது.


இலங்கைத் தேர்தல் திணைக்களத்தில் 67 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 30 கட்சிகள் பல ஆண்டுகளாகச் செயற்பாட்டு நிலையில் இல்லை. இவற்றின் பதிவுகள் உடனடியாக இடைநிறுத்தப்படவுள்ளன. விடுதலைப் புலிகளால் 1990ம் ஆண்டில பதிவு செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் பதிவை நீக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நன்றி தமிழ்வின்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|