தனது மெய்ப் பாதுகாவற் படைப் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கடாபி!

லிபிய ஜனாதிபதி கடாபி தனது மெய்ப்பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


தற்போது கடாபி தலைமறைவாகியுள்ள நிலையில் அப்படையைச் சேர்ந்த பெண்கள் சிலர் தங்களது வாழ்க்கை தொடர்பில் ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

கடாபி மற்றும் அவரது அரசாங்கம் தங்களை வற்புறுத்தி படைக்குச் சேர்த்ததாக தெரிவித்துள்ளனர். 



மேலும் கடாபி தங்களை முதலில் வல்லுறவிற்கு உட்படுத்தியதாகவும் பின்னர் அவரது மகன்களில் ஒருவருக்கு அனுப்பியதாகவும் பின்னர் மற்றையவர்களுக்கு அனுப்பியதாகவும் அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.


தாங்கள் கடாபியை தந்தை போல நினைத்ததாகவும் அவர் இவ்வாறான கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


கடாபிக்கு 1970 ஆம் ஆண்டு முதல் விசேட பயிற்சியளிக்கப்பட்ட பெண்கள்  ( இவர்கள் 'அமெசொனியன் கார்ட்ஸ்' என அழைக்கப்படுகின்றனர். )
மெய்ப்பாதுகாவலர்களாக செயற்பட்டு வருகின்றனர்.


விசேட பயிற்சியளிக்கப்பட்ட இப்பெண்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே படையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இவ் விடயம் தொடர்பான ஆதாரங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன.

இவை சர்வதேச நீதிமன்றத்தில் கடாபி மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|