ஜெர்மனியில் மர பொந்துக்குள் 5 ஆண்டுகள் வாழ்ந்த வாலிபர்!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள சிட்டி ஹாலுக்கு சுமார் 17 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் வருகை தந்தார். அப்போது அவர் இதற்கு முன்பு காட்டில் உள்ள மரப் பொந்துகளில் கடந்த 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கார் விபத்தில் அவரது தாயார் இறந்து விட்டார். எனவே, தந்தை அவரை ஒரு அடர்ந்த காட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் சிறிய கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர். அது சிதிலமடையவே, பின்னர் அவர்கள் அங்குள்ள பெரிய மரப் பொந்துகளில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில், அவரது தந்தை மரணம் அடைந்ததும் எப்படி வாழ்வது என தெரியாமல் அந்த வாலிபர் திகைத்தார். எனவே, காட்டில் இருந்து கால்போன போக்கில் 2 வாரங்களாக நடந்து பெர்லின் நகரை வந்தடைந்தார். பின்னர் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

இந்த தகவலை போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக்கேல் மாஸ் தெரிவித்தார். அந்த வாலிபர் சரளமாக ஆங்கிலம் பேசுவதாகவும், ஜெர்மன் மொழியில் சில வார்த்தைகள் மட்டும் பேசுவதாகவும் கூறினார். நல்ல உடல் நலத்துடன் இருக்கும் அவர் இதற்கு முன்பு எங்கு வாழ்ந்தோம் என தனக்கு தெரியவில்லை என கூறுகிறார்.

தந்தை தன்னை ராய் என பெயர் சொல்லி அழைத்ததாகவும் தெரிவிக்கிறார். எனவே, அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என ஜெர்மனி போலீஸ் புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|