சாவை ஏமாற்றிய பெடியனை நீங்கள் பார்த்தது உண்டா ? (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 13 வயதுப் பெடியன் சாவின் விளிம்பில் இருந்து உயிர் தப்பியுள்ளான். அதிசயமான இந் நிகழ்வை தொடரூந்து நிலைய கமராக்கள் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது. குறிப்பிட்ட சிறுவன் சம்பவ தினமன்று தொடரூந்து(ரெயில்) எடுப்பதற்காக சீட்டில் அமர்ந்து இருந்திருக்கிறான். அதுமட்டுமா சிகரெட் ஒன்றையும் பிடித்தவண்ணம் இருந்திருக்கிறான். அவன் நின்ற பிளாட்போமுக்கு எதிரே இருந்த பிளட்போமில் தனக்கு தெரிந்த பெண் ஒருவர் வரவே அவரைப் பார்க்க தண்டவாளங்களை கடந்து அடுத்த பிளாட்போமுக்கு அவர் தாவ முற்பட்டுள்ளார்.

நடுத் தண்டவாளத்தில் வைத்து எதிரே ஒரு தொடரூந்து வருவதை அவர் அவதானித்துவிட்டு தான் வந்த அதே பக்கத்துக்கு விரைந்து சென்று திரும்பவும் மேலே ஏற முயற்சி செய்துள்ளார். ஆனால் படுவேகமாக வந்த அந்த தொடரூந்து அவரை மோதியுள்ளது. அதிஷ்டவசமாக அவர் கீழே விழுந்து தப்பி விட்டார். ஒரு கையும் ஒரு காலும் உடைந்த நிலையில் அவர் மீண்டும் தாவி மேலே ஏறி வந்து திரும்பவும் அமரும் காட்சி பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளது. சாவையே ஏமாற்றிய சிறுவனின் இக் காணொளியை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Thanks-Athirvu.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|