அரிய விண்கல் விழும் காட்சி ( வீடியோ இணைப்பு)

பெரு நாட்டில் ஒரு மலைப்பிரதேசக் கிராமம் ஒன்றில் விண் கல் வீழ்வதை ஒருவர் வீடியோவில் பிடித்துள்ளார். வேற்றுக்கிரக வாசிகளின் பறக்கும் தட்டு வீழ்கிறதா இல்லை பயணிகள் விமானம் வீழ்கிறதா என்று கூடத்தெரியாமல், அந் நபர் அதனை வீடியோ எடுத்துள்ளார். ஆனால் பின்னர் தான் அது ஒரு சிறியரக விண் கல் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மிகுந்த பிரகாசத்துடன் எரிந்தவண்ணம் வந்து பூமியோடு மோதிய அந்த விண்கல்லினால் தற்போது காட்டுத் தீ மூண்டுள்ளதாக அறியப்படுகிறது. பூமியில் இக் கல் வந்து விழும் போது சுமார் 40 அடி விட்டம் கொண்ட தாக அது இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


அந்த விண் கல் விழுந்த இடத்தில் தீ பற்றியதால் தற்போது அதனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், தீயை அணைத்த பின்னரே விண் கல்லை தாம் தேடவுள்ளதாகவும் பெரு நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|