செப்டம்பர் 23 ஆம் திகதி பூமியை நோக்கி வரும் புதிய அச்சுறுத்தல்: நாசா எச்சரிக்கை(வீடியோ இணைப்பு)

முற்றிலுமாக செயலிழந்த நிலையிலுள்ள செயற்கைக்கோளொன்று எதிர்வரும் சில தினங்களில் பூமியில் விழும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டெப்ரிஸ் எனப்படும் குறித்த விண்கலத்தின் நிறை 6-7 டொன்கள் ஆகும். இதனை நாசா விஞ்ஞானிகள் தற்போது உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச் செயற்கைக்கோளானது எதிர்வரும் 23ஆம் திகதியளவில் பூமியில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இக்கோளானது பூமியை வந்தடையும் போது 1006 துண்டுகளாக உடையுமெனவும் இவற்றில் 26 துண்டுகள் மட்டுமே பூமியில் விழுமெனவும் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு உடையும் துண்டுகளில் அதிகூடிய துண்டொன்றின் நிறை 350 பவுண்ட்கள் எனவும் இவை பூமியில் மனிதரொருவரை மோதுவதற்கான சாத்தியம் 3200 க்கு 1 என அவர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை நாசா வரும் நாட்களில் வழங்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இது எப்பகுதியில் விழுமென நாசா விஞ்ஞானிகளால் கூட உறுதியாகக் கூற முடியாது.

அண்டார்டிகாவைத் தவிர பூமியின் எப்பகுதியிலும் இது விழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு சூரியன்களைக் கொண்ட கோள்

இதேவேளை இரண்டு சூரியன்களை, ஒரு கோள் சுற்றி வருவதை, அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.

கெப்ளர்-16பி எனப் பெயரிடப்பட்டுள்ள இக் கோளானது பூமியிலிருந்து 200 ஒளிஆண்டு தொலைவில் அமைந்துள்ளது.

Thanks-Virakesari.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|