இது முதலையா இல்ல டைனோசரா? 20 வருடங்களாக அச்சுறுத்தி வந்த இந்த இராட்சத முதலை பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள புனாவான் என்னும் கிராமத்தில் பிடிக்கப்பட்டுள்ளது. நதிக்கரை மற்றும் சதுப்புநிலங்களை அண்மித்த இக்கிராமத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அங்கு வாழும் முதலை மீனவர்கள் மக்கள் மற்றும் மக்களால் வளர்கப்படும் எருமை மாடுகள் போற்றவற்றுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளது. பல மீனவர்கள் மற்றும் கால்நடைகளின் இறப்புக்கு மத்தியில் இந்த முதலையை பிடித்துவிட அங்குள்ளவர்கள் தீர்மானம் எடுத்தனர். இதனடிப்படையில் 3வார போராட்டத்துக்கு மத்தியில் சுமார் 100 ஆண்கள் சேர்ந்து இந்த இராட்சத முதலையை கைப்பற்றியுள்ளனர். ஒரே நேரத்தில் மூவரை விழுங்கக்கூடிய இந்த முதலை 1தொன் எடை கொண்டதாகவும் 18-21 அடி நீளமுடனும் காணப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் உலகின் மிகப்பெரிய முதலையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment