கடாபி அரசிற்கு ஆயுதங்களை விற்ற சீனா: வெளியாகியது இரகசியம்

லிபியாவில் கடாபி ஆட்சியின் இறுதிக் கால கட்டத்தில், சீனா அந்நாட்டு அரசிற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்யதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிளர்ச்சியாளர்கள் மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த நேரத்தில், கடந்த ஜூலை மாதம் கடாபியின் பிரதிநிதிகள் சீன நிறுவனங்களுடன் ஆயுதக்கொள்வனவு தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ரொக்கெட் லோஞ்சர்கள், பீரங்கிகளைத் தகர்க்கும் ஏவுகணைகள், தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் என்பனவற்றை சீனா விற்பனை செய்துள்ளது.

இவ் விற்பனையானது ஐ.நாவின் சட்டவிதிகளுக்கு முரணானதென லிபிய கிளர்ச்சியாளர்களின் இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது.

கனேடிய பத்திரிக்கையான "த குளோப் எண்ட் மெயில்' வெளியிட்ட கடாபி அரசின் உளவுத் துறை அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களின் மூலமே இத்தகவல் வெளியுலகிற்கு தற்போது தெரியவந்துள்ளது.

லிபியா இடைக்கால அரசுக்கு உதவிகள் வழங்கும் 63 நாடுகள் கூட்டமைப்பில் சீனாவும் இணைந்துள்ள வேளையில் இத்தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|