ஒட்டிப்பிறந்த இரட்டையரை பிரித்து வரலாறுபடைத்ததனர் வைத்தியர். (காணொளி, பட இணைப்பு )

பிரித்தானிய வைத்தியர் குழுவொன்று தலையால் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைத் தனித்தனியே பிரித்து மருத்துவ வரலாற்றைப் படைத்துள்ளனர். றிற்றல் மற்றும் றிற்றாஜ் கபோரா என்ற 11 மாத வயதான இரு பெண் குழந்தைகள் எப்போதுமில்லாதவாறு மிகவூம் வெற்றிகரமாகச் சிகிச்சையால் பிரிக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறு தலையொட்டிப் பிறப்பவை 10 மில்லியனில் ஒன்றாகவே இருக்கும். அதிலும் இவை உயிர்பிழைப்பதும் அரிதே. றிற்றாஜ் தான் தனது சகோதரியின் மூளைக்கு அரைவாசி குருதி வழங்கலைச் செய்தாள். இதனால் இவளே இருவருக்குமான வேலைகளில் பெரும்பாலானவற்றைச் செய்யவேண்டியிருந்தது. சிகிச்சை மூலம் குருதியமுக்கத்தில் எந்தவொரு அளவூம் குறைந்தாலோ அது அவ்விருவருக்கும் நரம்பியல்ரீதியில் சேதத்தை உண்டுபண்ணியிருக்கும்.

இருப்பினும் 4 மாதங்கள் வைத்தியசாலையில் இருந்ததன் பின்னர் சிறப்பாக இச்சிகிச்சை மூலம் இவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். எந்தவிதமான நரம்பியல் பாதிப்புகளும் இவர்களுக்கு ஏற்படவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|