அவுஸ்திரேலியாவிலும் இலங்கையை துரத்தப்போகும் போர் குற்ற வழக்கு !

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் செல்லும் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதற்கு சில மனித உரிமை அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை சிட்னி நகரில் உலக தமிழ் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்�ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை வெளியிட்டுள்ளது. எனினும், அரச தலைவர்களுக்கான ஏர்க் சேர்விஷ் சர்வதேச இணக்கப்பாடு இலங்கை ஜனாதிபதிக்கும் பொருந்தும் என்பதால் நீதிமன்ற அழைப்பாணையைப் பெற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த பல அதிகாரிகள் தற்சமயம் அவுஸ்திரேலியாவில் நிலைகொண்டுள்ளதால் அவர்களுக்கு எதிராகவும் ஒரு பன்முகப்படுத்தப்பட்ட பல வழக்குகளை தொடுப்பது குறித்து அவுஸ்திரேலிய தமிழர் பேரவையும் மற்றும் உலகத் தமிழர் பேரவையும்(GTF) இணைந்து ஆலோசனை நடத்திவருவதாகவும் அறியப்படுகிறது. மகிந்தர் எந்த ஒரு நாட்டிற்குச் சென்றாலும் அங்கே நெருக்குவாரங்களை ஏற்படுத்துவதில் உலகத் தமிழர் பேரவை முனைப்புக்காட்டிவருகிறது. இது குறித்த மேலதிக தகவல்கள் மிகவிரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
நன்றி-அதிர்வுஇணையம்

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|