இலங்கையில் எண்ணெய் வளமா? அப்ப அமெரிக்காட்ட அடி வாங்கத்தான் வேணும்?

சர்வதேசத்தில் வல்லரசாக இருக்கும் அமெரிக்காவின் நீண்ட நாள் கனவுகள் ஏராளம். அதில் ஒன்று எண்ணெய் வளம் கொண்ட நாடுகளை வளைச்சுப் போடுவது.

அத்தோடு சர்வதேசத்தைத் தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற நினைப்பும் ஒரு பக்கத்தில் அமெரிக்காவுக்கு இருக்கத்தான் செய்கின்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக எண்ணெய் வளம் கொண்ட நாடுகள் மீது ஒரு வகைப் பார்வையைச் செலுத்தி வரும் அமெரிக்கா, அதனைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வர பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களைப் பறிகொடுக்க, பலியெடுக்கத் தயங்குவதில்லை.

அந்த வகையில்தான் ஈராக் மீதான தாக்குதலும், சதாம் உஷைனுக்கான மரண தண்டனையும் அரங்கேற்றப்பட்டது.

இந்த வரிசையில்தான் தற்போது கிளர்ச்சிப் படைகளின் உதவியுடன் லிபியாவில் கால் பதித்த அமெரிக்கா, நேற்று முன்தினம் அந் நாட்டைப் பல ஆண்டுகளாகத் தனது சர்வாதிகாரத்தின் கீழ் வைத்திருந்த கடாபியையும் போட்டுத் தள்ளியுள்ளது.

எனவே அமெரிக்காவின் எண்ணெய் வளத்தைச் சுரண்டும் கபட நாடகத்தின் பல வழிகள் வெற்றி பெற்று வருகின்றது.

அதாவது வன்னிப் பெருநிலப்பில் இலட்சக் கணக்கான மனித உயிர்கள் காப்பாற்றுமாறு கதறும் போது கண்டுகொள்ளாத அமெரிக்கா, லிபியாவின் மீது தாக்குதல் நடத்திக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கியமைக்கான உள்நோக்கம் என்ன?

ஆகவே எண்ணெய் வளம் கொண்ட நாடுகளைச் சூறையாடும் வேட்டையில் இறங்கியுள்ள அமெரிக்காவுக்குத் தற்போது எங்கள் நாட்டு ஜனாதிபதி மன்னாரில் எண்ணெய் வளம் இருக்கிறது என்று கிடங்கு வெட்டிக் காட்டி விட்டார்.

எனவே இலங்கையில் இனியொரு போராட்டமோ, இனப்படுகொலைகளோ அல்லது போர்க் குற்ற விசாரணைகள் என்ற கோணத்திலோ நிச்சயம் அமெரிக்கா, இலங்கை மீது படையெடுக்கும் என்பது நிறுத்திட்ட உண்மை.

அதிலும் கடாபி மீது போர் தொடுத்தவேளையில் கடாபி கலங்காதே என உசுப்பேத்தியவர் இலங்கை ஜனாதிபதி மகிந்த. எனவே இது எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு நாள் இலங்கை வேண்டிக்கட்டுவது உறுதி.
எது எவ்வாறாயினும் எமது இனத்தை அழித்தவர்கள் அழிவதில் சந்தோசப்படாது விடினும், தடுக்கும் நினைப்பில் தமிழர்கள் இல்லை.

இலங்கையில் எண்ணெய் வளமா? அப்ப அமெரிக்காட்ட அடி வாங்கத்தான் வேணும்?

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|