தீ காயம் ஏற்பட்டால் ஐந்து நாட்களிலேயே புதிய தோல்: மருத்துவ உலகின் சாதனை

தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தோலை உடனடியாக உருவாக்கும் ஸ்பிரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
தீ விபத்துகளில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையின் போது ஸ்கின் கல்சர் என்னும் முறையில் புதிய தோல்கள் உருவாக்கப்படும். இதற்காக 21 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும்.

தற்போது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் புதிய தோல்களை உருவாக்க ஸ்பிரே ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

இந்த ஸ்பிரேயை தீக்காயம் பட்ட இடத்தில் அடிக்கும் போது விரைவாக செல்கள் பெருக்கம் நடந்து புதிய தோல் உருவாகிறது.

வெறும் 30 நிமிடங்களில் இந்த சிகிச்சை முடிந்து விடும். புதிய தோல் வெறும் 5 நாட்களிலேயே உருவாகி விடுகின்றன.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|