வண்ணத்துப்பூச்சியின் வியக்கவைக்கும் சாதுர்யம்!

அழகிய வண்ணத்துப்பூச்சிகள் ஆபத்து காலங்களில் அருகில் இருக்கும் தங்கள் இனத்துக்கு சிக்னல் கொடுத்து சாதுர்யமாக தப்ப வைக்கும் முறையை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்து போயுள்ளனர்.

ஐரோப்பிய பூச்சி இன ஆராய்ச்சியாளர்கள் வண்ணத்துப் பூச்சிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். தொடர்ந்து அவற்றின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. அவற்றின் சாதுர்யமான செயல்கள் பிரமிப்பூட்டுவதாக உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வண்ணத்துப்பூச்சிகள் அழகிய வண்ணமயமான சிறகுகளை பலவிதமாக அசைத்து அருகில் இருக்கும் தங்கள் இனத்துக்கும் ஆபத்து குறித்த எச்சரிக்கையை உணர்த்துகின்றன. இதன்மூலம் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகில் முதல்முறையாக இத்தகைய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

சி.என்.ஆர்.எஸ் பாரிஸ் அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இங்கிலாந்து எக்சிடர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேத்யூ ஜோரான் தலைமையில் இந்த வித்தியாசமான ஆய்வை மேற்கொண்டனர்.

வியக்க வைக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் செயல்பாடுகளை பற்றி அவர்கள் கூறியதாவது: வண்ணத்துப்பூச்சிகள் நுண்ணிய உடலும் பெரிய அழகிய சிறகுகளும் கொண்டவை. உலகில் உள்ள மற்ற பூச்சிகளில் இருந்து மாறுபட்டு காணப்படுகிறது. அரிய வண்ணங்களை கொண்ட சிறகுகளை அசைத்து அருகில் இருக்கும் தங்கள் இனத்துக்கு சிக்னல் கொடுக்கின்றன. ஆபத்து நெருங்குவதை குறிப்பால் உணர்த்தி சாமர்த்தியமாக தப்புகின்றன. இவற்றின் இந்த செயல்பாடுகள் “முலேரியன் மிமிக்கிரி” எனப்படுகிறது. அமேசான் காடுகளில் அதிக அளவில் காணப்படும் ஹெலிகோனியஸ் நுமாட்டா என்ற வகை வண்ணத்துப்பூச்சிகளே இத்தகைய முறையை அதிகம் பின்பற்றுவது தெரியவந்துள்ளது.

ஒரே குரோமோசோம் உள்ள குறிப்பிட்ட வண்ணத்துப்பூச்சிகளின் உடலில் ஏராளமான ஜீன்கள்தான் அவற்றின் சிறகுகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆற்றல்களுக்கு காரணமாக உள்ளது. இத்தகைய ஜீன்கள் “சூப்பர்ஜீன்” எனப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து வண்ணத்துப்பூச்சிகளுக்கும் சூப்பர் ஜீன் அமைப்பு இருக்காது.

ஜீன்கள் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிகளின் செயல்பாடுகள் வெவ்வேறாக இருக்கும். இயற்கையில் காணப்படும் சில பூக்களிலும், உயிரினங்களில் நத்தையின் உடலிலும் இத்தகைய ஜீன்கள் உள்ளன. அவற்றின் ஓடுகள் மற்றும் நிறத்துக்கு இந்த ஜீன்கள்தான் காரணம்.
நன்றி-தமிழ்CNN

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|