
நம்ப முடியாமல் அல்லவா இருக்கிறது... ஆம், மரணப் பசி கொண்ட ஒன்பது ஆடுகள் இலைகளையாவது உண்ணும் நோக்கில் மரத்தின் மேல் ஏறி நிற்கும் தத்ரூப காட்சி தான் இது.இந்த தைரியமான ஆடுகள் இலைகள், பழங்களை உண்ணுவதற்காக மரங்களில் ஏறி நிற்கின்றன.இதில் ஒரு ஆடு குறித்த மரத்தின் ஆகக் கூடிய உயரமான 17 அடி உயரத்தில் நிற்கிறது.
மொரோக்கோ நாட்டின் சாலையோரம் வாகனமொன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது Gavin Oliver என்ற புகைப்படப்பிடிப்பாளரால் மேற்படி ஆச்சரியமான புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னியைச் சேர்ந்த 38 வயதான குறித்த புகைப்படப் பிடிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்,
அங்கே சுமார் 30 ஆடுகள் இருந்தன. அவை மரத்தை விட்டு கீழே இறங்குவதும் தாவிக் குதிப்பதுமாக இருந்தன.
குறித்த ஆடுகளை மேய்க்கும் சிறுவனும் மரத்தின் அருகில் இருந்தான்.
வழமையாக தரையில் புற்களை மேயும் ஆடுகளை மரத்தின் மேல் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment