பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை: இதுவரை நடக்காத புதிய சர்ச்சை! (படங்கள் இணைப்பு)

மத்திய பிரதே மாநிலத்தில் அரசு சார்பில் நடத்தி வைக்கப்பட்ட மாஸ் திருமணத்தில் தாலி கட்டும் முன்னதாக பல பெண்களுக்கு கன்னித்தன்மை குறித்த சோதனையும், கர்ப்பம் தொடர்பான சோதனையும் நடத்தப்பட்டது. இது இந்த மாநில அரசுக்கு கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

முதல்அமைச்சர் ‘கன்யா தான் யோஜனா’ என்ற திட்டத்தின்படி இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது. பா.ஜ., ஆளும் மாநிலத்தில் இந்த திட்டத்திற்கு இங்கு பெரும் வரவேற்பு உள்ளதால் மாவட்டம் முழுவதும் பல கிராமங்களில் இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடல், புடலாக நடந்து வருகிறது.

ஆதிவாசி பெண்கள் :

இங்குள்ள பீயூட்டல் மாவட்டத்தில் ஹராத் கிராமத்தில் நேற்று ஏறககுறைய 400 ஜோடிகளுக்கு இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் ஆதிவாசி பெண்கள் அதிகம் இடம் பிடித்தனர், குறிப்பாக ஆதிவாசி பெண்கள் 90 பேருக்கு இந்த கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டுள்ளதாக இவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சோதனைக்கு பின்னர் இதில் சில பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று புறந்தள்ளப்பட்டுள்ளனர். இதனை சில பெண்கள் , சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அறிக்கை கேட்கிறது அரசு :

இச்சம்பவம் தொடர்பாக மாநில உயர் அதிகாரியிடம் கேட்டபோது; இது போன்ற சோதனைகள் எங்கும் நடத்தப்பட்டதில்லை. இதற்கு யார் காரணம் , இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார் என்ற விவரம் குறித்து முழு அறிக்கை கேட்டுள்ளோம் என்றார். இது தொடர்பான விசாரணை குறித்து முழு அறிக்கையை மாவட்ட கலெக்டர் அரசுக்கு ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளார். ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிர்கட்சியான காங்கிரஸ் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



நன்றி-தமிழ் சி என் .

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|