இந்தியாவின் மும்பையில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் கசாப் பயங்கரவாதிதான் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளச்சென்ற பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அத்துடன் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் மும்பைத்தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்காத பாகிஸ்தான் முதன்முறையாக தற்போது கசாப் பயங்கரவாதி என்பதை ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment