பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலிருந்து ஈராக்கின் அன்பார் மாகாண கவர்னர் உயிர்தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் அன்பார் மாகாண கவர்னராக இருப்பவர் காசிம் அல்- பஹாதாவி. இவர் காரில் சென்று கொண்டிருநதபோது, பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை கொண்டு மோதச் செய்தனர். இந்த சம்பவத்தில் அவரது பாதுகாவலர்களுக்கு படுகாயங்கள் ஏற்பட்டது. பயங்கரவாதிகள் இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2009ம் ஆண்டில் நிகழ்ந்த தாக்குதலில், இவரது ஒரு கால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment