தமிழீழ மாவீரர்நாள் வாரம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் குடாநாட்டில் இந்துகிறிஸ்த்தவ ஆலயங்களிற்கு இராணுவத்தினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதுடன் மாவட்டத்தில் இராணுவ புலனாய்வாளர்களினதும் செய்பாடுகள் அதிகரித்திருக்கின்றன.
கிராமப்புறங்களில் கடந்தாண்டு மாவீரர் நாளன்று மணியோசை எழுப்பப்படும் நேரத்தில் சில ஆலயங்களில் இளைஞர்கள் மணிகளை ஒலிக்கச் செய்திருந்தனர். இந்நிலையில் இவ்வாண்டு முற்கூட்டியே மாவீரர் வாரம் ஆரம்பித்தபோதே ஒவ்வொரு ஆலங்களுக்கும் இராணுவத்தினரின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப்பணியில் சுமார் 3தொடக்கம்5 வரையான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர் மேலும் கடந்தாண்டை விடவும் மக்கள் மத்தியில் தெளிவான நிலைப்பாடு உள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் இராணுவப் புலனாய்வாளர்களின் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை பருத்துறை வல்வெட்டித்துறை பகுதிகளில் நேரடியாக விளையாட்டு கழகத்தினர் மற்றும் கிராமத்திலுள்ள இளைஞர்களை சந்தித்த படையினரும் படைப்புலனாய்வாளர்களும் தேவையற்ற விடயங்களில் எவற்றிலும் தலையிடவேண்டாம் என தெரிவித்திருப்பதுடன்
அவ்வாறு தலையிட்டால் ஏற்படும் பின்விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்கவேண்டும் எனவும் அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்திருக்கின்றனர் எனினும் மாவட்டத்தில் பரவலாக இவ்வாண்டு மாவீரர் நாள் பற்றிய எண்ணவோட்டங்கள் வலுத்திருக்கின்றன.
நன்றி-தமிழ்வின் இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment