இதனை விட அகாஷி மகிந்தர் கைகளைப் பிடித்து சரமாரியகச் சிரிப்பதும் பின்னர் காதில் ஒரு கடி ஜோக் சொல்லிச் சிரிப்பதுமாக ஏகப்பட்ட கும்மாளங்கள் நடந்துள்ளதாம். இவர்கள் என்னத்தைப் பேசி அப்படிச் சிரித்தார்கள் என்று தான் தெரியவில்லை என்கிறார்கள் அருகில் இருந்த அதிகாரிகள். சமாதான காலகட்டத்தில் அகாஷி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சிக்கு உலங்கு வானூர்தி மூலம் வந்துசெல்வது வழக்கம். அவ்வாறு அவர் வந்து சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்த பின்னர் பல தடவைகள் "டாங்" என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் விருந்தினர் மாளிகைக்குச் சென்று புலித்தேவனோடு சேர்ந்து முட்டை பிரைட் ரைஸ் சாப்பிடுவது வழக்கம்.
ஆனால் வெள்ளைக்கொடியோடு சரணடையச் சென்று சுட்டுக்கொல்லப்பட்ட புலித்தேவன் குறித்து அகாஷி அவர்கள் அப்போது வாயே திறக்கவில்லை. பல தடவைகள் தாம் சந்தித்த சு.ப தமிழ்ச்செல்வன் மறைவுக்குக் கூட அவர் இரங்கல் தெரிவிக்கவில்லை. ஆனால் தன்னை ஒரு சமாதானத் தூதுவர் என்றும் தான் ஒரு நடு நிலைவாதி என்றும் அவர் அடிக்கடி கூறிவந்தார். விடுதலைப் புலிகள் வெல்லப்பட்ட பின்னர் அவர் இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து அடிக்கும் லூட்டியே தனி !
நன்றி-அதிர்வு.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment